ஆண்கள் ஆயுளின் ஆணிவேர்
அன்பென்ற ஆயுதம் வெல்லும்
ஆணின் பெருமை சொல்லும்
கல்லையும் கனியாய் மாற்றும்
முள்ளையும் மலராய் மாற்றும்
உறக்கம் இன்றி உழைப்பு
உலவும் மனித பிறப்பு
உண்மையில் மனைவியே சிறப்பு
வாழ்க்கையில் ஆயிரம் உறவு
வாழ்க்கைத் துணையே வரவு
வாழும் மெழுகுவர்த்தி மனைவி
மறந்தும் மறவாதீர் மனைவியை
மனதின் வளம் மனைவியே!