அருந்தவம் ஆற்றி னாலும்
அடைந்திடா நலங்க ளெல்லாம்
வரங்களாய் உலகுக் கீந்து
மக்களை வாழ வைக்கும்
மரங்களை எல்லாம் வெட்டி
மனிதர்தாம் அழித்து வந்தால்
குரங்கின்கை மாலை போலக்
குவலயம் ஆகு மம்மா!
ஆழ்த்திடும் பஞ்சம் போக்கும்
பசிப்பிணி அகற்றும் மற்றும்
தாழ்த்திடும் வறுமை நீக்கும்
திருமிகு தருக்கள் சாய்த்து
வீழ்த்திடும் எண்ணம் தன்னை
விட்டுவிட் றின்றே காத்தால்
வாழ்த்துவாள் இயற்கை அன்னை
வளம்பல நமக்குத் தந்தே!
இமயவரம்பன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!