மரம் என்னும் அட்சயபாத்திரம் என்பதை நாம் எல்லோரும் இன்றைக்கு அவசியம் தெரிந்து செயல்பட வேண்டும். ஏனெனில் மரங்கள் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன. எல்லாவற்றையும் விட நாம் உயிர் வாழ இன்றியமையாத ஆக்ஸிஜனைத் தருகின்றன.
இன்றைய சூழலில் மரங்கள் தரும் ஆக்ஸிஜனின் விலையையும், எளிதில் வளரும் பல மரங்களின் நன்மைகளையும் இக்கட்டுரையில் காண்போம்.
அரச மரம்
அரச மரம்
போதி மரம் என்பது அரச மரம். அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.
ஆல மரம்
ஆலமரம்
இந்தியாவின் தேசிய மரம் ஆல மரம். அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் ஒர் ஆல மரத்து அடியில் தான் கீதையை உபதேசம் செய்தார். அளவில் சிறிய ஆல விதையானது ஒரு பெரிய படை தங்குவதற்கான நிழலினைத் தரக் கூடியது. பல் துலக்க ஆல மற்றும் வேப்பக் குச்சிகள் சிறந்தவை.
புங்கை மரம்
புங்கை மரம் நமக்கு அருமையான நிழலைத் தரும். விஷ மீன் கடித்த புண்ணை ஆற்ற இம் மரப் பிசினைத் தடவுவர்.
வேப்ப மரம்
வேப்ப மரம்
வேப்ப மரம் நமக்கு ஆரோக்கியமான காற்றினைத் தருகிறது. மேலும் இம்மரம் பல மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது.
வாகை மரம்
வாகை மரத் தழை வாயுவைப் போக்கும்.
மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.
இன்றைக்கு ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய். ஆக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவையான மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய். ஒரு வருடத்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 7,66,500 ரூபாய்க்கு ஆகும்.
ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் ஆக்ஸிஜனுக்கு ஆகும் செலவு 5 கோடி ரூபாயைத் தாண்டும்.
இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகின்றன. அப்படி என்றால் நாம் மரங்களை எந்த அளவிற்கு பாதுகாக்க வேண்டும்?
மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பெரிய வரம். இனியேனும் மரம் என்னும் அட்சயபாத்திரம் அழிக்கவிடாமல் தடுத்து காத்து வருங்கால சந்ததியினருக்கு பரிசு அளிப்போம். மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம் என்பது பழமொழி.
மரம் வளர்ப்போம்; உயிர் பெறுவோம் என்பது புதுமொழி.