எம்.எல்.ஏ மீராநந்தனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது ஊரே மகிழ்திருந்தது.
முன்பு அரசு கலைக்கல்லூரியில் அவர் படித்தவர் என்பதால் கல்லூரி ஆண்டு விழாவிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அவரும் வருவதாக சம்மதித்தார்.
கல்லூரி ஆண்டு விழா அன்று கல்லூரி வளாகமே களைகட்டி இருந்தது.
கல்லூரி முன்பு பார்த்தது போல் இல்லை, கட்டிடங்கள் வளர்ந்திருந்தன, வசதிகள் பெருகி இருந்தன.
விழா துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வந்திருந்தார் அமைச்சர் மீராநந்தன்.
காரை விட்டு இறங்கியதும் ஆபீஸ் ரூமின் பின்பக்கம் ‘விறுவிறு’வென்று நடந்தார். அந்தப் பகுதியை பார்வையிட்ட அவர் முகம் சுருங்கியது.
“இந்த இடத்தில நின்ன வாதுமை மரம் எங்கே?” கோபமாய் கேட்டார் மீரா நந்தன்.
“ஆபீசை விரிவுபடுத்துவதற்காக முறிச்சிட்டோம்” தாழ்மையாய் பதில் சொன்னார் கல்லூரி முதல்வர்.
“அந்த மரம் இந்த கல்லூரியில் நாம் படிக்கிறப்போ நான் நட்டு இருந்தேன். மூணு வருஷம் தண்ணீர் ஊற்றி இருக்கேன். நான் இந்த கல்லூரியை விட்டு போன பிறகும் வந்து பார்த்துட்டு போவேன். நிழலுக்கும், காற்றுக்கும். மழைக்கும் வேண்டி நின்ன மரத்த அனியாயமா முறிச்சிட்டீங்களே” மினிஸ்டர் மீரா நந்தன் கோபமாய் நடந்து காரில் வந்து ஏறினார்.
”மரத்தை முறிக்கிற மனுசங்ககிட்ட இனி என்ன பேச்சு?” என்று கத்திய அவரது குரல் கார் கதவுகளுக்குள் சத்தமாய் கேட்டது.
M.மனோஜ் குமார்
சென்னை
கைபேசி: 9789038172