மரம் வளர்த்திடு வாழ்வின் தூரம்

இறைவன் தந்த வரம்

இயற்கை அன்னையின் மரம்

இயன்றவரை இடுவோம் உரம்

இணைந்து பற்றுவோம் கரம்

 

வெட்டுவது அல்ல வீரம்

வளர்த்திடு வாழ்வின் தூரம்

விலக்கிடு மனித துயரம்

வாழ்ந்திடு மனதின் ஓரம்

 

மரத்தை வீழ்த்துவது அரம்

மரத்தை வளர்ப்பதே அறம்

 

மரங்கள் வாழ்வின் வரங்கள்

வளரவிடுங்கள் மரங்களை நன்றாக

வாழவைக்கும் மனிதர்களை நன்றாக..

 

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.