மருத்துவமனையின் ஒருநாள் வாழ்க்கை

மருத்துவமனையின் ஒருநாள் வாழ்க்கை

வண்ண வண்ண பூக்களெல்லாம்

வாசம் வீசுவதில்லை

எண்ணம்போன போக்கிலெல்லாம்

வாழ்க்கை வருவதில்லை

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உறவினர்கள்

தந்தை இறந்த துக்கத்தில் குடும்பத்தினர் சோகம்

குழந்தையின்மைக்கு மருத்துவர் ஆலோசனை

கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை

பிணத்திற்காக காத்திருப்போர – உடல்

குணத்திற்காக காத்திருப்போர்

பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது

மருத்துவமனைக்கு வந்து போகும்

ஒவ்வொரு மாந்தரின் முகத்தினிலும்

வாழைக்குருத்தாய் அவள் உடல்

வற்றறாத நதியாய் அவள் கூந்தல்

செவ்வானமாய் அவள் உதடு

அள்ளி பருக நினைத்தேன் – அவள்

விஷத்தை பருகி பிணவறையில்

அமைதியான மருத்துவமனையில்

ஒரு பெண்ணின் குரல் மட்டும்

எங்கும் எதிரொலிக்கிறது

அவளுக்கு கிடைத்த விடை

இல்லத்தை நோக்கி இறுதி பயணம்

மனம் விரும்பிய கணவனின் சடலத்தோடு

உயிருக்காகப் போராடும் ப‌லர்

உயிர் துச்சம் எனத் துறந்த சிலர்

அனைவரும் மருத்துவமனையில் ஒரு சுற்றுலா.

ப. கலைச்செல்வன்
இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு
பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
திருச்சி-23
கைபேசி: 9385517371