மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 40 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 7 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து, 11.06.2020 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை, சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.

கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

2020-ஆம் வெளியிடப்பட்ட மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், புதுடெல்லி 90.69 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர், 80.06 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

கிருத்துவ மருத்துவ கல்லூரி, வேலூர் 73.56 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை

வரிசை எண் பெயர் மதிப்பெண் இடம்
1 கிருத்துவ மருத்துவ கல்லூரி, வேலூர் 73.56 3
2 மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை, சென்னை 58.84 12
3 ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 57.90 13
4 பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர் 50.44 27
5 எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 49.06 31
6 சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானக் கழகம், சென்னை 46.49 34
7 அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் 46.47 35

 

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2019   பட்டியலில், 30 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 5 மருத்துவ கல்லூரிகள் தான் இடம் பெற்றன.

ஆனால் மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 40 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 7 மருத்துவ கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் தமிழக மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து முன்னேறவும், பெற்ற இடத்தைத் தக்க வைக்கவும் இன்னும்  முயற்சி செய்ய வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.