மருத்துவ முகமூடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

மருத்துவ முகமூடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்ற இக்கட்டுரை மருத்துவ முகமூடி அணியும் முறை, அதனுடைய அவசியம் பற்றிக் கூறுகிறது.

இன்றைய சூழ்நிலையில் மருத்துவமனைகளில் மட்டுமல்லாது, கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கிருமிகள் காரணமாக எல்லா இடங்களிலும் மருத்துவ முகமூடி அணிவது தேவையான ஒன்றாக உள்ளது.

மருத்துவ‌ முகமூடியை சரியாக அணிவது முக்கியமானது.

அதனால் மருத்துவ முகமூடி பற்றி அறிந்து கொள்ளுவது மிகவும் அவசியம் ஆகும்.

 

நம்மில் நிறைய பேருக்கு, அம்முகமூடியை எவ்வாறு அணிவது என்பதில் எப்போதும் குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது.

மருத்துவ முகமூடியில் இரண்டு பக்கங்கள் இருக்கும்.

ஒருபக்கம் அடர் நிறத்திலும், மற்றொரு பக்கம் வெள்ளையாகவும் இருக்கும்.

நோயாளிகள் அடர் நிறத்தில் உள்ள பக்கம் வெளிப்புறம் இருக்குமாறு அணிய வேண்டும்.

இதனால் நோயாளிகளிடமிருந்து நோய் கிருமிகள் வெளியே பரவவது தடுக்கப்படும்.

 

சாதாரண நபர்கள் வெள்ளைநிறம் உள்ள பகுதி வெளிப்புறம் இருக்குமாறு அணிய வேண்டும்.

இதனால் வெளிப்புறத்திலிருந்து கிருமிகள் உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது.

எனவே நோய்கிருமிகள் தாக்கத்திலிருந்து விடுபட விரும்புவர்கள், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பார்க்க செல்லுவோர் ஆகியோர்கள் வெள்ளை நிறம் உள்ள பகுதி வெளிப்புறம் இருக்குமாறு அணிய வேண்டும்.

பாக்டீரியா மற்றும் வைரஸ் ஊடுருவதை முகமூடி உபயோகிப்பதால் தடுக்க முடியும்.

முகமூடியை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

 

மருத்துவ முகமூடியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

முகமூடியை அணியும்போது மூக்கு, வாய், தாடைப் பகுதிகள் கண்டிப்பாக மூடி இருக்க வேண்டும்.

நோயாளிகள் இருமல், சளி மற்றும் பேசும்போது கண்டிப்பாக முக உறையை அணிய வேண்டும்.

முகமூடியை ஒருமுறை பயன்படுத்தி விட்டு பின்பு அதற்கான குப்பை தொட்டியில் போட வேண்டும்.

முகமூடியை அகற்றிய பின்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

பிறர் உபயோகப்படுத்திய முகமூடியில் நோய் சக்தியை தடுக்கும் திறன் இருக்காது. அதனால் அடுத்தவர்கள் உபயோகப்படுத்திய முகமூடியை அணியக் கூடாது.

முகமூடியை ஒருவரிடமிருந்து மற்றொருவர் மாற்றிக் கொள்வதன் மூலம் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவி விடும்.

முகமூடியின் முன்புறத்தில் பாக்டீயா மற்றும் வைரஸ் இருக்கும். அதனால் கட்டாயம் முன்புறத்தில் தொடக் கூடாது.

ஈரமான மற்றும் அழுக்கான முகமூடியை அணியக் கூடாது.

மருத்துவ முகமூடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் பகுதியைப் படித்து முகமூடியை சரியாகப் பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

 

One Reply to “மருத்துவ முகமூடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.