மற்றவர்களால்தான் நான் – கவிதை

உயிரடங்கிப் போகுமென்றே

உள்ளம் உலைகின்ற போதினிலே

ஊரடங்கிப் போன போது

உள்ளம் அடங்க மறுக்கின்றது.

வீடடங்கி வீற்றுருக்க முடியவில்லை.

என்னதான் கைபேசியினாலும்

தொலைக் காட்சியானாலும்

முகம்கொடுத்து முகம் பேச

வாய் விட்டு வாய் சிரிக்க

வாயையடைத்து போன போது

புரிகின்றது.

நான் நானாக இருக்க

மற்றவர்கள் இருக்க

மற்றவர்களுடன் இருக்க வேண்டி இருக்கின்றது

ஒர் உயிர்க்கொல்லி வைரஸ் வந்து

வாயடைத்து போகவைத்து

புரியவைத்தது.

நான் நானாக இருக்க

மற்றவர்கள் இருக்க வேண்டும்

மற்றவர்களால்தான் நான்!

Dr. இராமானுஜம் மேகநாதன்
பேராசிரியர் (மொழிக்கல்வி)
மொழிக் கல்வியியல் துறை
தேசிய கல்விஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்
புது தில்லி – 110016

One Reply to “மற்றவர்களால்தான் நான் – கவிதை”

  1. நான் நானாக இருக்க

    மற்றவர்கள் இருக்க வேண்டும்

    மற்றவர்களால்தான் நான்! – ஆம், உண்மை, உண்மை தான்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.