மலாய் கோப்தா

மலாய் கோப்தா செய்வது எப்படி?

மலாய் கோப்தா அருமையான தொட்டுக்கறி ஆகும். சப்பாத்தி, நான், பரோட்டா, சீரக சாதம் உள்ளிட்டவைகளுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

விருந்து மற்றும் பண்டிகை நாட்களில் இதனை எளிதாக செய்து அசத்தலாம். இதில் பயன்படுத்தப்படும் ப்ரெஷ் கிரீமை வீட்டிலேயே நான் தயார் செய்துள்ளேன்.

இனி எளிய முறையில் சுவையான மலாய் கோப்தா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோப்தா செய்ய

பனீர் – 100 கிராம்

உருளைக்கிழங்கு – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

இஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 2 எண்ணம் (பெரியது)

மசாலா பொடி – ‍ 1/2 ஸ்பூன்

கரம் மசாலா பொடி ‍ 1/4 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு – 2 எண்ணம் (பொடியாக நொறுக்கிச் சேர்க்கவும்)

கிஸ்மிஸ் – 10 எண்ணம் (தோராயமாக)

சோள மாவு – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கறி தயார் செய்ய

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

தக்காளி – 3 எண்ணம் (மீடியம் சைஸ்)

மசாலா பொடி – 2 ஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 4 எண்ணம்

முந்திரிப் பருப்பு – 6 எண்ணம் (முழுமையானது)

கசகசா ‍- 1 & 1/2 ஸ்பூன்

கொத்தமல்லி இலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

ப்ரெஷ் கிரீம் – 5 ஸ்பூன்

வெள்ளை சர்க்கரை – 1 ஸ்பூன்

கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

கறி தயார் செய்ய தாளிக்க

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் ‍ 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை – 4 கீற்று

பட்டை – பாதி ஆட்காட்டி விரல் அளவு

ஏலக்காய் – 2 எண்ணம்

பிரிஞ்சி இலை – ஒரு எண்ணம்

கிராம்பு – 4 எண்ணம்

மலாய் கோப்தா செய்முறை

பனீரை துருவிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை அவித்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.

இஞ்சி வெள்ளைப்பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

முந்திரிப்பருப்பு மற்றும் கசகசாவை ஒரு கிண்ணத்தில் போட்டு, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆற விடவும்.

கொதிக்க வைத்த முந்திரி, கசகசா

ஆறியதும் தண்ணீரை வடித்து விட்டு, வேக வைத்த கசகசா மற்றும் முந்தரிப்பருப்பினை மிக்ஸியில் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத்துண்டுகளாக வெட்டவும்.

த‌க்காளியை அலசி சதுரத்துண்டுகளாக வெட்டவும்.

மல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் மூன்று ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்த்து அதில் சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

தாளிதம் செய்யும் போது

அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கும் போது

வெங்காயம் கண்ணாடிப்பதம் வந்ததும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.

தக்காளி சேர்த்ததும்

அதனுடன் மசாலா பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.

பொடி வகைகளைச் சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து முந்திரிபருப்பு, கசகசா விழுதினைச் சேர்க்கவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்கவிட்டு கெட்டியானதும் எடுத்து ஆற விடவும்.

முந்திரி, கசகசா விழுதினைச் சேர்த்ததும்
முந்திரி, கசகசா விழுதினைச் சேர்த்ததும்

வெங்காய தக்காளி வதக்கல் ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து நன்கு மைய விழுதாக்கிக் கொள்ளவும்.

ஆறிய வெங்காய, தக்காளி வதக்கல்

துருவிய பனீரை வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, அதில் மசித்த உருளைக்கிழங்கினைச் சேர்க்கவும்.

துருவிய பனீர்
உருளைக்கிழங்கு சேர்த்ததும்

அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மசாலா பொடி, கரம் மசாலா பொடி, உடைத்த முந்திரித்துண்டுகள், தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பொடி வகைகள், உப்பு, முந்திரி சேர்த்ததும்

பிசைந்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

சிறுஉருண்டையின் நடுவே கிஸ்மிஸ் பழம் ஒன்றை வைத்து உருட்டவும்.

நடுவே கிஸ்மிஸ் வைத்ததும்
உருண்டையாக உருட்டியதும்

உருண்டைகளை சோள மாவில் பிரட்டி எடுத்து கையால் தட்டி, அதிகம் ஒட்டி இருக்கும் மாவினை உதிர்த்துக் கொள்ளவும்.

சோள மாவில் தோய்க்கும் போது

வாணலியை அடுப்பில் வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு உருண்டையைப் போடவும்.

உருண்டை பிரியாமல் இருந்தால் அடுத்த உருண்டையைச் சேர்க்கவும்.

உருண்டைகளைப் பொரிக்கும் போது

1/2 நிமிட இடைவெளியில் உருண்டைகளைச் சேர்த்து அடுப்பினை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும் போது

அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயத் தக்காளி விழுதினைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அடுப்பினை சிம்மில் வைத்து அதில் வெள்ளைச் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

அரைத்த வெங்காய, தக்காளி விழுதினைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் ப்ரஷ் கிரீமில் பாதியைச் சேர்த்துக் கிளறவும்.

அதனுடன் நறுக்கிய கொத்த மல்லி இலையைத் தூவி கிளறவும்.

ப்ரெஷ் கிரீம் சேர்த்ததும்
கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்

பொரித்து வைத்துள்ள கோப்தா உருண்டைகளை கறியில் சேர்த்து, மீதமுள்ள ப்ரஷ் கிரீமைச் சேர்க்கவும்.

கோப்தா உருண்டைகளைச் சேர்த்ததும்

சுவையான மலாய் கோப்தா தயார்.

குறிப்பு

எண்ணெயில் கோப்தாக்களைப் பொரிக்கும் போது பிரிந்தால், உருண்டைகளுடன் தேவையான அளவு சோள மாவினைச் சேர்த்து பிசைந்து, உருண்டைகளாக்கிப் பொரிக்கவும்.

மசாலா பொடிக்குப் பதிலாக கொத்தமல்லிப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, சீரகப் பொடி பயன்படுத்தி கோப்தா தயார் செய்யலாம்.

பால் காய்ச்சி ஆறியதும் மேலே படரும் பாலாடையை மட்டும் தனியே எடுத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து, அதனை தேவைப்படும்போது வெளியே எடுத்து, ஒரே சீராகக் கிளறினால் ப்ரெஷ் கிரீம் தயார்.

ஜான்சிராணி வேலாயுதம்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.