மனிதர்கள் உறங்கும் இரவுப் பொழுதில்
மலர்ந்து மணக்கும் மல்லிகையே…
யாருக்காக உன் வரவோ?
நடுச்சாமத்தில் எதற்கு உன் பிறப்போ?
வானத்தில் இருக்கும் விண்மீன்களை
வசப்படுத்தவே நான் பிறந்தேன்
மணத்தால் இவ்வனத்தையும் நிரப்பி மேலெழுவேன்
விடிவெள்ளியை தொட்டு சிரித்திடுவேன்
என் சிரிப்பால்உலகினை
மகிழ்ந்திடச் செய்திடுவேன் என்று
மல்லிகை கூறுவதும் உண்மைதானா? புரியவில்லை
எனினும் மகிழ்ச்சி பரவட்டும் தடையின்றி
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942