ஆகாயத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட
மேகக்கூட்டங்கள்…
கலைந்து
ஒடுங்கி
கண்ணீர் தான் விட்டாலென்ன?
உழைப்பின் நடுவே
உற்பத்தியாகும்
வியர்வையாவது…
விளை நிலங்களில்
நீர் பாய்ச்சட்டும்!
அபிசேக ஆராதனைகள்
ஆறுகளாய் ஓடட்டும்!
ஆங்காங்கே தேங்கி நிற்கும்
சாக்கடை நீர்…
சரியான பருவத்தில்
மாயமாய் மாறி
மழையாக பொழியட்டும்!
கானல் நீராய் தெரிவது…
கற்கண்டு நீராய் மாறட்டும்!
எப்படியாவது மாரி பொழிய!
வையம் தழைக்க!
வஞ்சகமில்லா உலகம்
வாழ!
வழி கிட்டட்டும்!
– கவிஞர். பழ.தமிழன் சின்னா
புதுக்கோட்டை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!