மழையை விட…

அன்று…

எலெக்ட்ரிக் ட்ரெயின்
மழை
உன் கண்கள்

அதே மழை
காபி குடில்
ஈர நினைவு

அதே காபி குடில்
உன் கைகள்
மௌனம்

உன் கைகள்
ஒரே பாப்கார்ன்
காதல் படம்

மேடான சாலை
இருசக்கர வாகனம்
முதல் உரசல்

கடைசி பரீட்சை
நீண்ட விடுமுறை
முதல் முத்தம்

விடுமுறை
கசந்தது
சலித்தது

முத்ததடன்
மூச்சுக் காற்றும்
இடம் மாறவில்லை

நீண்ட நாட்கள்
முதல் பார்வை
பார்வை நீண்டது

பருவ மழை
இடியுடன் மின்னல்
இறுக்கமான அணைப்பு

காதலித்தேன்
உன்னை விட
மழையை!

இன்று வெறுக்கிறேன்
மழையை விட
உன் நினைவுகளை!

க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768