மழை என்னும் வரம்

உன்னை ஒன்றும் செய்ய முடியாது – நீ
ஊருக்குள்ளே வருகின்ற போது
கண்ணீர் வடித்துக் காய்ந்திருக்கும் பூமி – உன்
கால்பட்டதாலே சிரிக்குதே கவனி

விண்ணிலே மேகமென நிற்பாய் – நீ
வேகமாகப் பெய்யும்போது மெல்ல சிரிப்பாய்
தண்ணீராய்த் தரைக்கு வருவாய் – எம்
தாகம் தீர்க்கும் ஊற்றாக‌ எங்கும் நிறைவாய்

நன்னீராய் மென்னீராய் இருந்தாய் – சிலர்
நஞ்சினையே கலந்திட நீயும் கரிக்கின்றாய்
வெந்நீராய் உன்னை மாற்றும் விதமாய் – இங்கு
வேண்டாத கழிவினை உன்னில் கலக்கின்றார்

ஏன்னதான் அறிவியல் எனினும் – உன்னை
இன்றுவரை எவர்தான் செய்திட இயலும்
மண்ணில் எல்லா உயிர்களும் பிழைக்க – இங்கு
மழை என்ற வரமென நீயும் மலர்கின்றாய்

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.