மழை – ஒரு கவிதை

கடலிருந்த நீர்த்துளிகள் சூரியனால்

வழிமாறிப் பிரிந்து ஆவியாயினவே!

காற்று தூசிகள் ஆவியை

மேகமாக்கி திரிய விட்டனவே!

 

மரமெனும் தேவதை மேகங்களை ஒன்றாக்கியதே!

ஒன்றான மகிழ்ச்சியினாலே

ஆடிப்பாடி கொண்டாடினவே!

 

இடியோசை மின்னலெனும்

இசை நடன நாட்டியத் தாலே

ஆனந்த கண்ணீர் விட்டனவே!

 

விழிகளில் கண்ணீர் சிந்தி விழ

விண்ணின் வழியே வழிந் தோட

விரித்த குடை மழையாயிற்றே!

– இரா.அறிவழகன்