மழை வரப்போகிறது – துளிப்பாக்கள்

அடைமழையில் அன்பு சகோதரர்கள்

கந்தூரி விழா
கந்தன் விநாயகர்
பொம்மைக் கடை

 

சலித்துக் கொள்கின்றன
சீண்டுவார் யாரும் இல்லை
தொலைக்காட்சிப் பெட்டிகள்

 

மறக்க முடியவில்லை
தொடர் வண்டிப் பயணம்
பக்கத்து இருக்கை

 

வாகனத்துக்கும் மரியாதை
போக்குவரத்து காவலர் புலம்பல்
கேடுகெட்ட அரசியல்

 

மனம் குளிருது
உடலும் குளிருது
மழை வரப்போகிறது

-செல்லம்பாலா, சென்னை.

 

Comments

“மழை வரப்போகிறது – துளிப்பாக்கள்” மீது ஒரு மறுமொழி

  1. செல்லம்பாலா, சென்னை

    எமது துளிப்பாக்களை வெளியிட்டு சிறப்பித்தமைக்கு நன்றிகள். தொடர்வோம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.