மஹாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்ய

மஹாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்ய நாம் செய்த தர்மத்தைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டே இருக்கக் கூடாது.

தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு படுக்கக் கூடாது.நடத்தைக்கெட்ட ஆண் பெண் வாழும் வீட்டில் மஹாலட்சுமி இருக்க மாட்டாள். கொடூரமான கோபக்காரன், சண்டைக்காரன் எப்பொழுதும் மற்றவர்களை குறை கூறுபவன், கோள் சொல்பவன் ஆகியவர்களின் வாசலையும் மிதிக்க மாட்டாள்.

அழுக்கான சரீரத்தையும், ஆடைகளையும் உடையவன், கைகளால் தன் உறுப்புகளின் மீது தட்டி தாளமிடுபவன், விரதமிருக்க வேண்டிய நாட்களில் உண்பவன் வீட்டில் மஹாலட்சுமி வாசம் செய்ய மாட்டாள்.

பணத்தைச் சட்டைப்பையில் இடதுபுறம் உள்பாக்கெட்டில் இதயத்தைத் தொடுமாறு வைக்க வேண்டும். திருப்பதி சுவாமியை பிரார்த்தனை செய்ய அவரின் இடது மார்பில் உறையும் மஹாலட்சுமி ஆனந்தித்து ஆசீர்வதிப்பாள்.