மாடித் தோட்டம் – பயன்கள்

மாடித் தோட்டம் மன அழுத்தம் மற்றும்  மனக்கவலை இரண்டையும நீக்கும். வீட்டில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகளினால் மன அழுத்தம் உண்டாகும். இனம் புரியாத பயம், மன அழுத்தத்தினால் வயிற்றுப்புண், இதய நோய் உண்டாகும். இவற்றை தவிர்க்க மாடித்தோட்டத்திற்கு சென்று சிறிது நேரம் செடிகளின் வளர்ச்சி மற்றும் பூத்திருக்கும் பூக்கள் மற்றும் காய்கள், கனிகளைக் கண்டவுடன் நம்முடைய மன அழுத்தம் சிறிது சிறிதாக குறையும்.

அவற்றிற்கு தேவையான தண்ணீர் விடும் போதும், ஊட்டமிடும் போதும் நம்முடைய மன அழுத்தமும், மனக்கவலையும் உடனே நீங்குவதுடன் அல்சர், இதய நோய் போன்றவை வராமலும் தடுக்கலாம். மேலும் சுத்தமான, விஷமற்ற பூக்கள், காய்கள், பழங்கள் நமது பூஜைக்கும் சமையலுக்கும் கிடைக்கின்றன. எனவே நம் உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் கொடுத்து நம்முடைய ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும் மரம், செடி, கொடிகளுடன் மாடித் தோட்டம் அமைத்து வாழ்வோம்! வளமாக!

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.