அன்றைய பாடம் அன்றே படித்திடு

ஆசிரியர் சொல்படி நடந்திடு

இனிய சொல்லால் பேசிவிடு

ஈகையை தினமும் செய்துவிடு

உண்மையை உள்ளத்தில் வைத்துவிடு

ஊரெல்லாம் உன்பெயர் உணர்த்திவிடு

எளிமையாய் என்றும் வாழ்ந்துவிடு

ஏணியாய் பிறரை ஏற்றிவிடு

ஐயம் விலக கற்றுவிடு

ஒற்றுமை ஓங்க பாடுபடு

ஓடாமல் நின்று எதிர்த்துவிடு

ஒளவையார் போல் புலமைஎடு

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்