பருவத்தில் சிறந்த பருவம் மாணவர்
பருவம் உலகின் உருவம்
கல்வி கருவறை பள்ளியின் வகுப்பறை
மாணவ பருவத்தின் முதலறை
வாழ்வில் சிக்கலிலா கோலத்தின் முதல்
புள்ளி மாணவர் பள்ளி
ஐயமின்றி புத்தகத்தை ஆய்ந்து கற்க
ஆசிரியரின் துணையே வழி
தாய் தந்தை ஆசிரியருடன் கடவுளையும்
வழிபடுவதே உயர்விற்கு வழி
உடலும் உள்ளமும் எண்ணமும் என்றுமே
நலமானால் வளமாகும் வாழ்வு
பயிற்சி விடாமுயற்சி கொண்டு தளர்ச்சி
இன்றி பெறுவதே வெற்றி
சினம் குணத்தை அழிக்கும் தினம்பிறர்
மனம் தொடுவதே நல்குணம்
பிறருக்கு உதவியும் நன்மையும் செய்து
அறத்துடன் வாழ்வதே வாழ்வு
பிறரை மகிழ்வித்து தானும் மகிழ்ந்து
உறவை வளர்ப்பதே வாழ்க்கை