மத்தாப்பூ சேலைகட்டி மாமன்பொண்ணு வாராடா
மனசெல்லாம் சுக்குநூறா ஆக்கிவிட்டு போறாடா
சித்தாடை கட்டிவந்தா சின்னப் பொண்ணுதானடா
சின்னாளம் பட்டுடுத்தி சிலிர்த்துப்போகும் தேரடா
எட்டணா துட்டப்போல பொட்டுவச்சு வாராடா
எட்டிநான் கையைத் தொட்டா தட்டிவிட்டு போறாடா
தொட்டாச்சிணுங்கி யாட்டம் முகஞ்சுருங்கிப் போறாடா
தூரநின்னு பார்க்கும்போது ஓரக்கண்ணால் சிரிப்பாடா
நெய்யொழுக பொங்கல்வச்சு நேத்துஅவ தந்தாடா
நெஞ்சிலந்த பொங்கலாட்டம் ஒட்டிகிட்டு நிக்காடா
பைய்யநானும் பக்கம் போனா பாஞ்சுஓடிப் போறாடா
பைத்தியமா என்னை இங்க ஆக்கிவிட்டுப் போறாடா
குத்துவிளக்காட்டம் தலைகுனிஞ்சு வாராடா
கூடவரும் அத்தைக்காரி கொட்டும்தேளப் போலடா
பத்துப்பேரை கூட்டிக்கிட்டு நானும்போகப் போறேண்டா
பாக்குவச்சு பரிசம்போட்டு நாள்குறிச்சு வாறேண்டா
இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!