மாமழையே! வாமழையே!

இந்த ஒரு வாரமா அங்கே மழை இங்கே மழை என வானிலை ஆய்வு மையத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும் விருதுநகர் மாவட்டத்தை இந்த ஆண்டின் பருவமழை இன்னும் எட்டிக் கூட பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

மயில் தோகை விரித்து ஆடினால் நல்ல மழை வருமுன்னு சொல்லுவாங்க.

இங்கே ஒரு வாரமாக தினசரி காலையில் மயில் அழகாக தோகை விரித்து ஆடுவதைப் பார்க்கிறோம். ஆனால் முறையான மழைதான் இன்னும் பெய்த பாடில்லை.

வானிலை ஆய்வு கருவிகளைப் போல இந்த மயிலுக்கும் பருவக்காலம் கணிப்பதில் ஏதோ குள‌றுபடி வந்து விட்டது போல.

பெய்யாமல் பொய்த்துப் போன பருவமழை குறித்துப் பேசிகொண்டிருக்கும் போது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் ஒன்றின் வரிகள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

உத்தமன் என்னும் ஒரு சினிமா படத்தில் நடிகர் திலகம் அவர்கள் பாடுவது போல ஒரு பாடல் வரும்.

படத்தின் கதையை அப்படியே சொல்லும் பாடல் அது. அதில் வரும் வரிகள்…

ஆமாம். வடகிழக்கு பருவமழை மாதமான ஐப்பசியில் மழை பெய்யவில்லை. இப்போது கார்த்திகையும் வந்து விட்டது.

நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்!

கார்த்திகையில் கார்மேகம் திரண்டு வந்து

பருவமழையைப் பரவலாய் தருமென்று!

மாமழையே!

இங்கே வாமழையே!

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294