மாமழை – கவிதை

வளியோடு வரும் வானின் கீழே

ஒளிஒலியோடு வரும் மண்ணிலே

துளிகள் தரும் துயரம் நீக்கும்

களிப்பு பெறும் மக்கள் மனம்!

 

கிளிபோல் கொஞ்சி கொஞ்சி பேசும்

குளிர் தந்து உயிர்நீர் தரும்

தளிர் வளரும் வளம் உயரும்

துளிர்விடும் செடிகள் பயன் தரும்!

 

தூளியான மரங்களைத் தூய்மை செய்யும்

உளிபோல உழைக்கும் உழவரின் நட்பே

தாளிக்கும் சத்தத்தின் தாய் மடியே

ஒளிந்தோம் உனை அறியா நாளில்!

 

தெளிந்தோம் இன்று

நீதான் உயிரே மாமழையே!

 

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: