மாரி என்றால் மழை என்று பொருள். 2021ம் ஆண்டு சென்னையின் பெருமழை பாதிப்பைப் பார்த்து வருத்தமும் கோபமுமாய் எழுந்த கவிதை.
ஏரி வாய்க்காலைத் தூக்கி விழுங்கியோர்
தப்பிப் பிழைத்த லரிது
காரிகாரி உமிழ்ந்தும் கேட்காத மக்கள்
மாரியால் ஆவார் மாக்கள்
வீடுவீடென்று மாடியில் மாடி கட்டியோர்
நாறுநாறென்று நாறுவரே மாரியால்
காரும் பீருமாய் வாழும் சென்னையும்
சாக்கடைக் கூவமாம் காண்
அவரவர் செய்த வினைக்கு அவரவரே
பிணையாவார் மற்று இலர்
அகழி ஆயிரம் தோண்டலைக் காட்டிலும்
தூர்க்காமல் இருப்பதே நன்று