உன்னுடன் நான் பேசிய நினைவுகள்
நாம் சண்டையிட்ட தருணங்கள்
என்னை மாட்டிவிட்ட குறும்புகள்
எனக்காக பழியேற்ற தைரியம்
உடன் விளையாடிய மகிழ்வுகள்
பகிர்ந்திராத பொம்மைகள்
பகிர்ந்து கொண்ட சோகங்கள்
மறைத்த கவலைகள்
பிரச்சனை யிலிருந்து மீட்ட தருணங்கள்
பொய் சொல்லிய நிகழ்வுகள்
தப்பித்த ஒட்டங்கள்
திருடிய மிட்டாய்கள்
பிரமிக்க வைத்த வாழ்த்துக்கள்
ஏங்க வைத்த கேளிக்கைகள்
ஒன்றாக ஏறிய மரங்கள்
ஏமாற்றித் திரிந்த விடுமுறைகள்
வளராமல் ஆசைப்பட்ட மீசைகள்
வளர்ந்ததும் போட்ட தாவணிகள்
ஆசைப்பட்ட அணிகலன்கள்
தேவைப்பட்ட ஆதரவுகள்
தரப்படாத தோள்கள்
ஊர் சுற்றிய இடங்கள்
நம்மை மறக்காத தோப்புகள்
நாம் விளையாடிய ஆலமரம்
சாப்பிட்ட புளியம்பழம்
சமைத்த கூட்டாஞ்சோறு
வராமல் வந்த வயிற்றுவலி
வந்தும் மறைக்கப்பட்ட காய்ச்சல்
நனைத்த மழை விட்ட காகித கப்பல்
ஆடிய கரகம் பார்த்த திரைப்படம்
ஆசைப்பட்ட புதுத்துணி
காட்டிய ஊர்த் திருவிழா
ரசித்த மாமன் மகள்
கெத்து காட்டிய மாமன் மகன்
பெயர் தெரியாத அயலான்
விளக்கிய பராம்பரியம்
தெரிந்ததும் உதவிய நற்பண்பு
சோறு போட்ட விவசாயம்
மணக்கும் மல்லிகைப்பூ
கைகோர்த்த கல்யாண தருணம்
ரகளை செய்த மச்சான்
குறையாத கறி கொழம்பு
யாவரையும் உபசரிக்கும் மரியாதை
என்றும் மறவாத புன்சிரிப்பு
அனைத்தும்
ஞாபகம் வருகிறது ஒருவனைப்
பார்க்கையில் ஓர் இன்ப நினைவாய்
ஆம்… அவன் தான் என்
நண்பன்…!
கு.சிவசங்கரி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!