மாறா திரைப்படம் ஒரு அழகான ஆழமான காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இதில் மாதவன், சிரத்தா, ஸ்ரீநாத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனரான திலீப் குமார் படத்தை அழகாக இயக்கியுள்ளார்.
இப்படம் மார்ட்டின் பிரகாட் எழுதிய மலையாளத் திரைப்படமான சார்லி (2015)-ன் மறு ஆக்கம் ஆகும்.
படம் மெதுவாகச் செல்கிறது. கேரளத்தின் அழகை தனது கேமராவின் வழியாக அற்புதமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
உண்மையான காதல் கரடுமுரடானது என்பதற்கேற்ப, பல தடைகளைத் தாண்டி, வாழ்க்கையின் முதுமையில் ஒன்றாகச் சந்திக்கிறார்கள்.
திலீப் குமார் எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அனைவரின் நடிப்பையும் சிறப்பாக இயக்கி இருக்கிறார். துணை நடிகர், நடிகைகளின் நடிப்பு இயல்பாக இருந்தது. திலீப் குமார் தமிழ் திரையுலகில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
மாறா என்றால் மாறாதது என்றும் பொருள் கொள்ளலாம். அது போல் மாறா, காலங்கள் கடந்தாலும் அழியாத உண்மைக் காதல். இது (பழமையின்) ஆழமான காதல்.
மாறா திரைப்படத்திற்கு இனிது வழங்கும் மதிப்பெண்கள் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்!
துறை வாரியான மதிப்பெண்கள் (100க்கு)
கதை | 80 |
திரைக்கதை | 85 |
வசனம் | 75 |
இயக்கம் | 80 |
பாடல் | 78 |
பின்னனி இசை | 85 |
ஒளிப்பதிவு | 80 |
நகைச்சுவை | 70 |
ஆபாசமின்மை | 78 |
புதுமை | 70 |
மாறா திரைப்படத்திற்கு மதிப்பெண்கள் – 78 / 100
(மதிப்பெண்கள் 50க்கு கீழ் – பார்க்கத் தேவை இல்லை, 50 – 60 பார்க்கலாம், 60 – 80 நன்று, 80 – 100 மிக நன்று)
இயக்கம் – திலீப் குமார்
தயாரிப்பு – பிரதீக் சக்கரவர்த்தி, சுருதி நல்லப்பா
திரைக்கதை – நீலன் பிபின்
இசை – ஜிப்ரான்
நடிப்பு – மாதவன், சிரத்தா, ஸ்ரீநாத்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துக்குமார்
விநியோகம் – அமேசான் பிரைம் வீடியோ
வெளியீடு – 17 டிசம்பர் 2020