உலகெங்கிலும் quiet quitting – new work trend என்பது சமீபத்திய பணியிட நடைமுறை ஆகி மாறி வருகிறது.
Quiet quitting என்பது சத்தம் போடாமல், சொல்லாமல் கொள்ளாமல் மேலதிகாரி மேசையில் விலகல் கடிதத்தை வைத்து விட்டு வருவதல்ல.
கூடுதலாகவோ பொறுப்பு பணி அல்லாத பணிகளையோ இழுத்துப் போட்டு செய்யாமல், என்ன பணிக்கு வந்தோமோ அதை மட்டும் செய்து விட்டு, ‘பை பை’ என்று அன்றைய நாளை முடிப்பதுதான் மேற்குறிப்பிட்ட ட்ரெண்டிங் கூறும் பொருள்.
Value addition, extra mile, extra hours, extra efforts, initiative, raising to the occasion என்பதை எல்லாம் பின்பற்றியவர்கள், தங்கள் career graph ல் உயர்ந்த நிலைக்குச் சென்றார்கள் என்பது உத்யோக வாழ்வில் / வர்த்தக வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் வரலாறு. ஆனால் அது முந்தைய வரலாறு.
இன்றைய காலகட்டத்தில், உலக அளவில் பணியாளர்கள் இடையே, 52% நபர்களிடம் களைப்புத் தன்மை (burnt out) இருப்பதால் key responsibility area என்கிற முக்கிய பொறுப்பு பணியைப் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ட்ரெண்டிங் ஆரோக்யமானது என்று கூற முடியாது. பணியை வேண்டா வெறுப்பாக செய்ய (disengaged) இது வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
எனவே, மேலே உள்ள அதிகாரிகளிடம் மனம் விட்டுப் பேசி, சுமூகமான பணிச் சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதனால் பலன் கிடைக்கா விட்டால் வேறு நிறுவனத்தை நாட வேண்டும்.
பணிச் சூழலில் ஆரோக்யமான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் பணி பற்றிய சிந்தனையோடு வலம் வராமல் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், ப்ரெயின் ப்ரேக் உத்திகள் கையாண்டு, புத்துணர்ச்சி உடன் கல்லூரிக்குப் போகும் புதிய மாணவன் போல் உற்சாகத்துடன் பணியிடத்திற்கு மலர்ந்த முகத்துடன் செல்லுதல் வேண்டும்.
அதனால் நமது புத்துணர்ச்சி, உடன் பணி புரிபவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும். பணிச்சுமை என்பது தெரியாது.
(தேவை கருதி ஆங்கிலச் சொற்கள் கையாளப்பட்டன)
எஸ்.மதுரகவி
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com