எதையுமே நீ பார்க்கிற
அறிந்த பொருட்களின்
மீதான அர்த்தங்கள்
எல்லாம் காலத்தின்
நதியில் கரைகிறது
நீ கட்டிய
மாளிகைகளும்
கோட்டைகளும்
அழிந்து கொண்டிருக்கிறது
உனக்கு இனி நேரமில்லை
நீ ஒன்றும்
செய்யாமல் இருந்தாலும்
நீ அழிவது நிச்சயம்
தெரியாத எது
உன் கற்பனையோ
அது மறதியில் இருப்பது
தொலைவில் இருப்பது
கண்ணில் படாதது
இந்த வாழ்க்கையிடமிருந்து
தன் வரலாற்றை
தேங்கிய குட்டையை
போல் கையகப்படுத்தியிருக்கும்
நீயோ நானோ
யாரும் எதுவும்
எல்லாமுமான எண்ண முடியாத
மண் துகள்களையும்
நட்சத்திரத்தின் முடிவின்மையையும்
கற்றது போக
மிச்சம் காத்திருக்கிறது
புஷ்பால ஜெயக்குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!