காயங்கள்
ஆறிவிட்டன
காரியங்கள்
பறவைக் கூடு
வெளிச்சம் தர வந்துவிட்டன
மின்மினிகள்
மலர்ந்த எள்ளுச் செடி
இந்தப் பாதையில்தான்
அம்மாவின் இறுதிப்பயணம்
மீண்டும் பறக்க ஆசை
எனக்கு வேண்டும்
என் வானம்
இலையுதிர் கால மழை
நடுக்கம் தருகிறது
கதகதப்பைத் தேடணும்
– செல்லம்பாலா, சென்னை