முடக்கத்தான் தோசை செய்வது எப்படி?

முடக்கத்தான் தோசை என்பது சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவு ஆகும்.

முடக்கம் என்றால் தடை என்று அர்த்தம். உடலில் உண்டாகும் கைவலி கால்வலி போன்ற‌ முடக்கங்களை நீக்குவதால் இது முடக்கு அற்றான் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இது மருவி முடக்கத்தான் என்றானது.

முடக்கத்தான் கீரையைக் கொண்டு முடக்கத்தான் சூப், முடக்கத்தான் சட்னி, முடக்கத்தான் துவையல் உள்ளிட்ட‌ உணவுகள் செய்யப்படுகின்றன.

முடக்கத்தான் கீரை சற்று கசப்புத்தன்மை உடையது. இதனை தோசை மாவில் கலந்து தோசை ஊற்றும் கீரையின் கசப்புத் தன்மை தெரியாது.

இனி சுவையான முடக்கற்றான் தோசை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முடக்கத்தான் தோசைக்கு தேவையான பொருட்கள்

முடக்கத்தான் தோசைக்கு தேவையான பொருட்கள் 

தோசை மாவு
தோசை மாவு

 

தோசை மாவு – 1 கப் (6 தோசை அளவு)

முடக்கத்தான் கீரை – 1 கை பிடி அளவு

சின்ன வெங்காயம் – 8 எண்ணம்

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள்

மிளகு – 2 ஸ்பூன்

சீரகம் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தோசை சுடத் தேவையான அளவு

செய்முறை

முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து அலசிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து நேராக நறுக்கிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் உரித்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் முடக்கத்தான் கீரை, சின்ன வெங்காயம். வெள்ளைப் பூண்டு. மிளகு, சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கீரைக் கலவைக்குத் தேவையான உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

 

அரைத்த முடக்கத்தான் கீரை கலவை
அரைத்த முடக்கத்தான் கீரை கலவை

 

அரைத்த கீரைக் கலவையை தோசை மாவுடன் சீராகக் கலக்கிக் கொள்ளவும்.

 

அரைத்த முடக்கத்தான் கீரை கலவையை தோசை மாவில் சேர்த்ததும்
அரைத்த முடக்கத்தான் கீரை கலவையை தோசை மாவில் சேர்த்ததும்

 

முடக்கத்தான் தோசை மாவு
முடக்கத்தான் தோசைக்கான‌ மாவு

 

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் மாவினை தோசையாக ஊற்றி எண்ணெய் விடவும்.

 

தோசையாக ஊற்றியதும்
தோசையாக ஊற்றியதும்

 

தோசையை திருப்பியதும்
தோசையை திருப்பியதும்

 

வெந்ததும் மறுபுறம் திருப்பி வேக விடவும்.

சுவையான முடக்கத்தான்தோசை தயார்.

 

சுவையான முடக்கத்தான் தோசை
சுவையான முடக்கத்தான்தோசை

 

இதனுடன் சாம்பார், தேங்காய் சட்னி சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மிளகு, சீரகம், வெள்ளைப் பூண்டினை நல்ல எண்ணெயில் வதக்கி மாவில் சேர்த்து தோசை தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து தோசை தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

One Reply to “முடக்கத்தான் தோசை செய்வது எப்படி?”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.