முட்டைக்கோஸ் பொரியல் செய்வது எப்படி?

முட்டைக்கோஸ் பொரியல் விழாக்களின் போதும் பண்டிகை காலங்களிலும் செய்யக்கூடிய சைவ உணவு.

கல்யாண வீடுகளில் செய்யும் முட்டைக்கோஸ் பொரியல் நிறம் மாறாமலும் சுவையாகவும் இருக்கும்.

நாமும் அதனைப் போலவே சுவையான முட்டைக்கோஸ் பொரியலை செய்து அசத்தலாம். அதற்கு ஒரு சிலவற்றைப் பின்பற்றினால் போதும்.

அதனைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். முட்டைக்கோஸ் பொரியலைச் செய்து அசத்துங்கள்.

இனி சுவையான முட்டைக்கோஸ் பொரியல் செய்யும்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் – 200 கிராம்

கேரட் – 1 எண்ணம் (சிறியது)

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (பெரியது)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (சிறியது)

பாசிப்பருப்பு – 20 கிராம்

தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கீற்று

செய்முறை

முட்டைக்கோஸை பொடியாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

காரட்டை பொடியாக சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

நறுக்கிய முட்டைக்கோஸ், காரட்
நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் காரட்

வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக சதுரத் துண்டுகளாக்கவும்.

பச்சை மிளகாய் மற்றும் காம்பு நீக்கி அலசி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

நறுக்கிய வெங்காயம்,  பச்சை மிளகாய்
நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்

பாசிப்பருப்பினை அலசி 15 நிமிடங்கள் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.

ஊற வைத்த பாசிப்பருப்பு
ஊற வைத்த பாசிப்பருப்பு

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கும் போது
பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கும் போது

வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும் அதில் ஊற வைத்த பாசிப்பருப்பினைச் சேர்த்து ஒருநிமிடம் வதக்கவும்.

பாசிபருப்பினைச் சேர்த்ததும்
பாசிபருப்பினைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்த்து, சிம்மிற்கும் சற்று அதிகமான தீயில் அடுப்பினை வைக்கவும்.

பின்னர் அதனுடன் தேவையான உப்பு சேர்த்து முட்டைக்கோஸை மூடி வைத்து அவ்வப்போது ஒருசேரக் கிளறி விடவும்.

முட்டைக்கோஸ் சேர்த்ததும்
முட்டைக்கோஸ் சேர்த்ததும்

பெரும்பாலும் இப்பொரியலுக்கு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. முட்டைக்கோஸில் உள்ள தண்ணீரே போதுமானது.

தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரை அவ்வப்போது தெளித்துக் கொள்ளலாம்.

ஐந்து நிமிடங்கள் கழித்து முட்டைக்கோஸை நசுக்கிப் பார்த்து வெந்ததை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

முட்டைக்கோஸ் வெந்ததும்
முட்டைக்கோஸ் வெந்ததும்

முட்டைக்கோஸ் வெந்ததும் அடுப்பினை அணைத்து விட்டு அதனுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

தேங்காய் துருவல் சேர்த்ததும்
தேங்காய் துருவல் சேர்த்ததும்

சுவையான முட்டைக்கோஸ் பொரியல் தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் முட்டைக்கோசுடன் சிறிதளவு இஞ்சி துருவலைச் சேர்த்து பொரியல் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.