முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா? என்பது காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வரும் கேள்வி.
இந்த விவாதத்திற்கு கடைசியாக விடை கிடைத்து விட்டது. பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்யும் பிரபல உயிரியல் விஞ்ஞானி, இங்கிலாந்தின், ராட்டிம்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான்புக்பீல்ட் என்பவர் இது குறித்து ஆராய்ச்சி செய்து முட்டை தான் முதலில் வந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
D.N.A. என்ற மரபணுச் சோதனை மூலம் வேறு பறவை இனத்தின் கலப்பினால் உருவானது தான் கோழி என்கிறார் ஜான்புக்பீல்ட். புதிய உயிரினத்தின் வளர்ச்சியே முட்டையில் இருந்துதான் ஆரம்பமாகிறது. சில நேரங்களில் அபூர்வமாக நடக்கும் பிறப்புக் குறைபாடுகளால் புதிய உயிரினங்கள் தோன்றும்.
பொதுவாக, பறவைகளின் வாழ்நாளில் அதன் மரபணு மாறவே மாறாது. எனவே, கோழியின் மரபணு அதன் முட்டைக்குள் இருந்துதான் வருகிறது. லண்டன் கிங் கல்லூரி அறிவியல் துறைத் தத்துவத்துறைப் போராசிரியர் டேவிட் பாப்பின்யூ என்பவரும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.
‘முட்டைக்குள் கோழி இருந்தால் தான் அது கோழி முட்டை’ கோழி வருவதற்கு முன்பே உலகில் பல பகுதிகளில் டைனாசோர் போன்ற பெரிய மிருகங்களின் முட்டைகள் இருந்துள்ளன. எனவே, முட்டை தான் முதலில் வந்திருக்க வேண்டும் என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த சார்லஸ் பர்ன்ஸ்.
மறுமொழி இடவும்