கேலி கிண்டல்
வழக்கமாய்
நடையுடை பாவனை
என சகலமும்
வாயில்
விழுந்து எழும்!
அவசியமா இல்லையாவென
அளவளாவல்கள் தீராது
வேறு
வேலை இல்லை
அவர் அப்படித்தான்
எனும்
ஏகவசனங்கள்!
மற்றும் பல
இடித்துரைத்தல்கள்
ஏளனங்கள்
உணர்வுகளைக் கசக்கிய
இழிந்த
சொல்லாடல்கள்
என
நீண்டு கொண்டே
செல்கின்றன!
ஓயாது
கடமை செய்தோரை
புறந்தள்ளினர்
சடுதியில்!
மேலும் காரணங்கள்
போதாமல்
வலிந்து
ஒதுக்கி வைக்கப்பட்ட
அவர்களைத் தூக்கியெறிய
வயோதிகமொரு
பெருங்குற்றமாகிறது!
எனில்
உதாசீனம் செய்து
ஊறு விளைவித்தலுக்கான
தண்டனை காத்திருக்கிறது
நாளைய முதுமையில்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!