கால்கள் ஓட காலங்களும் ஓட
நோவு மறந்த வாழ்வும்
கசந்து போனதே
உடனிருக்கும் துணையின்றி இருள் சூழ
பாசம் பந்தம் இன்றி
வெறுமை ஆனதே
பிள்ளைகளின் வருகை வெறும் சம்பிரதாயமாய்
புலரும் நாளும் கிழமையும்
மறந்து போனதே
கடமைகள் முடிந்து இளமை தொலைய
இன்று கட்டிலுக்கு பாராமாய்
அலுத்து போனதே…
இரா.ஜெயந்தி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!