காதலிக்க ஆசை கொண்டு
கண்மணியே உன்னைக் கண்டு
வீதியிலே நான் நடக்கும் வேளையில
வெள்ளி நிலா மிதக்குது வானத்துல
நாதம்தரும் மூங்கில் எல்லாம்
வண்டு தொட்ட வேய்குழலாம்
நானுமிங்க பாட்டுப்பாட நீயும்கூட
என்னை மெல்லத் தொட்டு சென்றிடத்தான் வேண்டுமடி
வேதமென நீ சொல்லும்
வார்த்தைகளே என்னைக் கொல்லும்
விஷமாக போய்விடுமோ பொன்மயிலே
என் வாழ்வே உன் கையிலதான் சின்னவளே
ஆதலினால் காதல் செய்வீர்
அன்று சொன்னான் பாரதியும்
அத்தையெனும் சிப்பி தந்த முத்துப்பெண்ணே
ஆசையோடு நீயும் தாயேன் முத்தமொன்று
இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
முத்துப் பெண்ணே கவிதையைக் கேட்டு மகிழுங்கள்
மறுமொழி இடவும்