முந்திரிக் கொத்து செய்வது எப்படி?

முந்திரிக் கொத்து வீட்டில் எளிய முறையில் செய்யும் இனிப்பு வகைச் சிற்றுண்டியாகும்.

இது பார்ப்பதற்கு முந்திரிப் பழமான திராட்சைக் கொத்தினைப் போல் உள்ளதால் முந்திரிக் கொத்து என்ற அழைக்கப்படுகிறது.

இனி முந்திரிக் கொத்து செய்முறைப் பற்றிப் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள் 

மைதா மாவு – 100 கிராம்

பச்சரிசி மாவு – 25 கிராம்

சமையல் சோடா – 2 சிட்டிகை

உப்பு – சிறிதளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

 

பூரணம் செய்ய

பாசிப் பருப்பு – 100 கிராம்

முற்றிய தேங்காய் – 1 (பெரிய எண்ணம்)

ஏலக்காய் – 5 எண்ணம்

மண்டை வெல்லம் – 200 கிராம்

 

செய்முறை

 

முதலில் பாசிப் பருப்பை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும்.

பாசிப் பருப்பு நன்கு சூடாகி வாசைன வரும்போது அடுப்பினை அணைத்து விடவும்.

 

பாசிப் பருப்பை வறுக்கும்போது
பாசிப் பருப்பை வறுக்கும்போது

 

சூடு ஆறியவுடன் அதனை மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும்.

முற்றிய தேங்காயை துருவிக் கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

 

தேங்காய் துருவல், மண்டை வெல்லம், ஏலக்காய் பொடி
தேங்காய் துருவல், மண்டை வெல்லம், ஏலக்காய் பொடி

 

அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேங்காய் துருவல், மண்டை வெல்லம், ஏலக்காய் பொடி ஆகியவை சேர்த்து அடுப்பினை சிம்மில் வைத்துக் கிளறவும்.

 

 அடுப்பில் வைத்துக் கிளறும்போது
அடுப்பில் வைத்துக் கிளறும்போது

 

மண்டை வெல்லம் இளகி தேங்காய் துருவலுடன் சேர்ந்து திரள ஆரம்பிக்கும்.

 மண்டை வெல்லம் முழுவதும் கரைந்ததும் அடுப்பினை அணைத்து விடவும். 

 

நன்கு திரண்டதும்
நன்கு திரண்டதும்

 

இதனுடன் பாசிப்பருப்பு மாவினைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

 

பாசிப்பருப்பு மாவினைச் சேர்க்கும்போது
பாசிப்பருப்பு மாவினைச் சேர்க்கும்போது

 

பூரணத்திற்குத் தயாரான மாவு
பூரணத்திற்குத் தயாரான மாவு

 

பின் தேங்காய் கலவையை நன்கு ஆற விடவும்.

கலவையை சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

உருண்டைகளாகத் திரட்டும் போது கைகளில் நல்ல எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

 

உருண்டை அளவு
உருண்டை அளவு

 

மாவு உருண்டைகள்
மாவு உருண்டைகள்

 

மைதா மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, சிறிதளவு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

மாவுகள் கட்டி விழாமல் நன்கு படத்தில் காட்டிய பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும். 

 

சரியான பதத்தில் மாவு
சரியான பதத்தில் மாவு

 

வாணலியில் பொரிக்கும் எண்ணெயை ஊற்றி காயவிடவும்.

தேங்காய் கலவை உருண்டைகள் மூன்றை முக்கோண வடிவத்தில் வைத்து மாவுக் கரைசலில் முக்கி எண்ணெயில் போடவும்.

 

கொத்தாக மூன்று உருண்டைகள்
கொத்தாக மூன்று உருண்டைகள்

 

மாவில் முக்கி எடுத்த‌ கொத்து
மாவில் முக்கி எடுத்த‌ கொத்து

 

வாணலியில் போட்டதும்
வாணலியில் போட்டதும்

 

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு வேக விடவும்.

 

ஒரு பக்கம் வெந்ததும்
ஒரு பக்கம் வெந்ததும்

 

இருபுறமும் வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.

 

தயாரான முந்திரிக் கொத்து
தயாரான முந்திரிக் கொத்து

 

சுவையான முந்திரிக் கொத்து தயார்.

இதனை தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள், வீட்டு விசேசங்கள் போன்றவற்றின் போதும் செய்து அசத்தலாம்.

இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.

 

குறிப்பு

தேங்காயை உடைத்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்திருந்து பின்பு துருவினால் துருவல் மிகவும் மெல்லிதாக இருக்கும். சுவையும் அதிகரிக்கும்.

விருப்பமுள்ளவர்கள் மஞ்சள் பொடியை மாவுக் கரைசலில் சேர்த்து முந்திரிக் கொத்தினைச் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.