நமக்கென்று கிடைத்ததை வைத்து
நம்பிக்கையோடு நடைபோடு மனிதா!
நன்மை நடக்கும் நாள் வரும்
நசுக்கும் துன்பம் தூளாகும் தூசாகும்
நட்போடு துணையும் இணையும் மனிதா!
நனவாக மாறும் கண்ட கனவுகள்
நதிநீர்போல் தெளியும் வாழ்க்கை வலி
நடுவில் நின்றுவிடாதே முன்னேறு மனிதா!
நகம்போல வெட்டவெட்ட மீண்டும் முன்னேறு
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
மறுமொழி இடவும்