முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று என்ற இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய  நாச்சியார் திருமொழி என போற்றப்படும் திருப்பாவையின் இருபதாவது பாசுரம் ஆகும்.

கண்ணனையும், நப்பினையையும் ஆயர்குலத்துப் பெண்கள் பள்ளி எழுப்பும் பாசுரம் இது.

திருப்பாவை பாடல் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே, துயில்எழாய்

செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா, துயில்எழாய்

செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பினை நங்காய், திருவே, துயில்எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

 

விளக்கம்

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முன்னால் சென்று, பக்தர்களின் துயர் தீர்க்கும் கலியுகத்தின் தெய்வமே, நீ துயில் எழ வேண்டும்.

செம்மையான செயல்களை நிகழ்த்துபவனே, திறமை மிகுந்த பலசாலியே, பகைவர்களுக்கு வியர்வை பெருகச் செய்து தோல்வி பயத்தைக் கொடுப்பவனே, குறையேதும் இல்லாதவனே, நீ துயில் எழ வேண்டும்.

பொற்குடம் போன்று மென்மையான மார்பகத்தையும், சிவந்த வாயினையும், சிறிய இடையையும் உடைய திருமகளாகிய நப்பினை பெருமாட்டியே, நீயும் துயில் எழ வேண்டும்.

எங்களுக்கு விசிறியும், கண்ணாடியையும் தந்து இப்போதே கண்ணனை எங்களுடன் நீராட அனுப்பி, அவனுடைய அருள் மழையில் எங்களை நனைய வைக்க வேண்டும்.

கோதை என்ற ஆண்டாள்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: