முயற்சி தேவையே – கவிதை

உலகம் தரும் எதிர்பார்ப்பு

குடும்பங்கள் தரும் சுமைகள்

உள்ளுணர்வு தரும் வலி

நினைவுகள் தரும் கண்ணீர்

உறவுகள் தரும் தடைகள்

எதிர்பார்க்க வைக்கும் நோக்கம்

ஏமாற்றம் தரும் வாழ்க்கை

நம்பிக்கை உடைக்கும் சோகம்

கெட்டவனாக்கும் தீமை

நல்லதை அழிக்கும் வஞ்சகம்

பொதுமையை சுரண்டும் சுயநலம்

மரியாதை மறக்கடிக்கும் திமிர்

திறமையை விலைபேசும் இலட்சம்

தீமைக்கு வழிவகுக்கும் சிற்றின்பம்

தூய்மையை மறைக்கும் அழுக்கு

பொய் போர்வை போர்த்தும் ஆசாமி

பிரச்சனைக்கு வழிவகுக்கும் தோழமை

நம்பிகெடுத்த நம்பிக்கை துரோகம்

உறக்கத்தை திருடும் கவலைகள்…

உறவாடிக் கெடுக்கும் பொய்கள்

அலைக்கழிக்கும் மனங்கள்

வாழத்தடுக்கும் சாதி

வாழத் தகுதியற்ற சமூகம்….

குரல் கொடுக்காத மனிதர்கள்…

இவற்றை மாற்ற ஓர்

முயற்சி தேவையே… நம்மிடம்!

கு.சிவசங்கரி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.