பட்டு உருமாவிற்கு
ஆசைப் பட்டானென்று
பட்டை பட்டையாய் வீங்கும்
அளவிற்கு வெளுத்து வாங்கிவிட்டு…
பட்டு தொழிலாளர் சங்க கூட்டத்திற்கு
தாமதமாகி விடுமோ என
மூச்சிரைக்க ஓடி வந்து
மேடைதனில் பாடுகின்றார்!
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்!
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!!
சுகன்யா முத்துசாமி
