முருகனைப் பாடியாடி
உருகிடு மனத்தினாலே
ஒருமுகமாய் நினைப்பதாலே
துயரெலாம் களையலாமே!
ஆண்டியாய் கோலம் கொண்ட
ஆண்டவன் மலையில் உள்ளான்
வேண்டியே அவனை நாடி
வரங்களை பெறலாம்தானே!
சூரனை வென்று நின்றான்
தேவர்கள் தலையைக் காத்தான்
சூழ்ந்த நம்மனயிருளைப் போக்க
அறுபடை கோயில் கொண்டான்!
உரத்தியேக் கூவிச் சொல்லி
சரவணபவனே என்போம்
சிரத்தினால் மனமதொன்றால்
சரணடைவோம் விரைந்து இன்றே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!