முற்றுப்புள்ளி

பல முறை வந்து விட்டது என்று
நினைத்து எதிர்பார்த்து இதுவரை
வராத ஒன்று முற்றுப்புள்ளி

நான் மழலை மறந்து
நன்றாக உச்சரித்து பேசியபின்
என் பொருட்டு என் தாய்க்கு
வந்ததில்லை முற்றுப்புள்ளி

ஆரம்ப கல்வியில் ஆங்கில பேச்சு
வந்த போதும் என் பொருட்டு
என் தாய்க்கு வந்ததில்லை முற்றுப்புள்ளி…

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
பின்னர்கூட என் பொருட்டு
எவரிடமும் வந்ததில்லை முற்றுப்புள்ளி

தற்காலிகமாக தனியார் ஆலையில்
பணியில் சேர்ந்த போதும் தொடர்ந்து
நிரந்தர பணியாளராக நகர்ந்திட்ட போதும்
என் பொருட்டு எவரிடமும் வந்ததில்லை முற்றுப்புள்ளி

எனக்கு திருமணம் ஆன நாளில்
என் பொருட்டு எவரிடமும் வந்ததில்லை முற்றுப்புள்ளி ….

ஆண்டுகள் சில கடந்த பின்னர்
தந்தையான பின்னரும் என் பொருட்டு
எவரிடமும் வந்ததில்லை முற்றுப்புள்ளி

போனது போகட்டும் நமக்கு நம் வாழ்வில்
எப்போது வரும் இந்த முற்றுப்புள்ளி
என்ற என் கேள்விக்கு

சிரித்தபடி பதில் சொன்னது காலம்
தொடர்புள்ளி உயிர்ப்புடன் உலா வரும் வரை
முற்றுப்புள்ளிக்கு என்ன வேலை?

மகாத்மா இறந்த பின்னரும்
உயிர்ப்புடன் இருக்கின்றாரே!
அவர் போன்றவர்க்கு
எப்போதும் இல்லை முற்றுப்புள்ளி…

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942