மூக்குத்தி அம்மன் – மதிப்பெண்கள்

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன் திரைப்படம் என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் இயக்கிய பக்திப் படம் ஆகும்.

இப்படம் போலி சாமியார்களிடம் மக்கள் மாட்டிக் கொண்டிருப்பதையும், அவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதையும் தடுத்து, விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக எடுக்கப்பட்ட படம்.

த்தின் நகைச்சுவை கலந்த திரைக்கதை மிக அழகாக இயக்கப்பட்டிருக்கிறது. நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுக்கபட்ட வேடத்தினை ஏற்று, மக்களிடையே விழிப்புணர்வினையும் ஏற்படுத்தியுள்ளனர்.

மொத்த படக்குழுவிற்கும் எங்கள் வாழ்த்துக்கள்!. நல்ல விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களுடைய முயற்சிகள் பாராட்டத்தக்கது.

காலங்கள் மாறலாம். அறிவியல் துறையில் வளர்ச்சி காணலாம். மனிதன் தன் அறிவைப் பயன்படுத்தி, எல்லா துறைகளிலும் மாற்றம் நிகழ வேண்டும் என்று காலத்திற்கு ஏற்ப தன்னையும், தன்னை சுற்றியுள்ளவைகளையும் தனக்கு சாதகமாக மாற்றியுள்ளான்.

மனிதன் காடுகளை அழிக்கிறான். தான் இப்புவியில் தனித்து வாழ வந்த இனம் என்று எண்ணி, இயற்கைக்கு புறம்பாக எல்லா செயல்களையும் நிகழ்த்துகிறான். ஆனால் ஆதி காலம் தோன்றியதிலிருந்து இன்று வரை, கடவுள் என்ற ஒருவரை உருவாக்கி, அவருக்கு பணிந்தும் வாழ்கிறான்.

சில மனிதர்கள் தாம் செய்யும் தவறுகளுக்கு கடவுளிடம் அஞ்சியும் அதற்கான பரிகாரமும் செய்தால் நாம் புனிதமடைவோம் என்ற மூடநம்பிக்கையை வளர்த்துக் கொண்டே வருகிறார்கள்.

இந்த பயத்தை பயன்படுத்தி தந்திர மனிதர்கள் தன்னை கடவுளின் சீடர் என பாவித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு

உழைத்து வாழ்பவன் ஒரு கோடி

ஏமாற்றி வாழ்பவன் ஏழு கோடி

மக்களில் பெரும்பான்மையோர், கடவுளே தன்னிடம் வந்து, வரங்கள் பல கொடுத்து தன்னை கோடீஸ்வரானாக்கவே விரும்புகிறார்கள்.

கடவுள் உருவங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவை எதற்காக உருவாக்கப்பட்டன என்பதை மக்கள் மறந்து விட்டனர். கடவுள் காணிக்கை, பணத்திற்கேற்ப பஜனை, சம்பிரதாயத்திற்கு ஏற்ப சடங்குகள் என்று அனைத்தையும் மாற்றி தப்பான வழியில் செல்கின்றனர்.

மாற‌ வேண்டியது மனித மனங்களே. உழைப்பே தெய்வம், உண்மையாக வாழ்வதே வாழ்வு, குழந்தையின் குணங்களே கடவுள்.

மனிதர்களாய் வாழ்வோம்!

மற்றவர்களை வாழ வைப்போம்!

மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு இனிது வழங்கும் மதிப்பெண்கள் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்! 

துறை வாரியான மதிப்பெண்கள் (100க்கு)

கதை80
திரைக்கதை85
வசனம்85
இயக்கம்85
பாடல்80
பின்னனி இசை80
ஒளிப்பதிவு80
நகைச்சுவை90
ஆபாசமின்மை85
புதுமை70
மூக்குத்தி அம்மன் – மதிப்பெண்கள்

திரைப்படத்திற்கு மதிப்பெண்கள் – 82 / 100

(மதிப்பெண்கள் 50க்கு கீழ் – பார்க்கத் தேவை இல்லை, 50 – 60 பார்க்கலாம், 60 – 80 நன்று, 80 – 100 மிக நன்று)

இயக்கம் – என்.ஜே. சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி

தயாரிப்பு – ஐசரி கணேஷ்

கதை – ஆர்.ஜே.பாலாஜி

இசை – ஜி.கிரிஷ்

நடிப்பு – நயன்தாரா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி

ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்

படத்தொகுப்பு – ஆர்.கே.செல்வா

கலையகம் – வேல்ஸ் பிலிம் இன்டர்நேசனல்

விநியோகம் – டிஸ்னி 10 ஞாட் ஸ்டார்

வெளியீடு – 14 நவம்பர் 2020

Comments

“மூக்குத்தி அம்மன் – மதிப்பெண்கள்” மீது ஒரு மறுமொழி

  1. Bharathichandran

    விமர்சனம் அளவுகோல் மிகச்சரியாகப் பொருந்தியிருக்கிறது. சமூகத்தை ஏமாற்றுபவர்கள், ஏமாளிகள் இந்த நாட்டில் அதிகம் என்பதைப் படம் காட்டி இருப்பதைத் தாங்கள் அழகாகச் சுட்டி இருக்கிறீர்கள். ஆன்மீகப் போர்வையில் நடைபெறும் பித்தலாட்டங்களைச் சரியாக உணர்த்தும் படம் இது. தொழில்நுட்பம் எவ்வளவுதான் பாடம் கொடுத்தாலும் திருந்தாத மக்கள்தான் இந்த மக்களாக இருக்கிறார்கள். அவர்களைத் திருத்துவதற்கு ஒரு பேரியக்கம் தேவைப்படுகிறது. அதில் இதுபோன்ற வணிகரீதியான திரைப்படங்கள் எந்தவிதமான மாற்றத்தையும் உருவாக்கிவிட முடியாது.