மூட்டு வலி பற்று மூட்டு வலியைக் நீக்கும் தன்மை உடையது. அதை எப்படி செய்வது எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மூசாம்பரம் – 100 கிராம்
அதிமதுரம் – 100 கிராம்
சிற்றாமுட்டி – 100 கிராம்
கற்பூரம் – 20 கிராம்
குன்றிமணி – 20 கிராம்
சுக்கு – 40 கிராம்
செய்முறை
மூசாம்பரம், அதிமதுரம், சிற்றாமுட்டி, கற்பூரம், குன்றிமணி, சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிலிருந்து தேவையான அளவு எடுத்து ஒரு முட்டை வெள்ளைக் கரு, ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து வீக்கங்களுடன் கூடிய மூட்டு வலிக்குப் பற்று இட வேண்டும்.