தேர்வு
அகண்ட இடைவெளி
யாராலும் எட்ட முடியாது
செருக்கில்
என் கரங்களைப் பார்க்கிறேன்!
ஒரு கையில்
என் மனம் போல்
விடைத் தாள்!
மறு கையில்
என் எதிர்காலம்
வினாத் தாள்!
வீண் அரட்டை
காணாத உளி ஒன்றை
என்னுடனே வைத்திருப்பேன்
வேண்டும்போது விரைவாக
செதுக்கி சொல்லை கொடுத்திடுவேன்
அழகான சொற்சிற்பம்
பிறர் மனதை ஆட்கொள்ள
மனமலர்வால் மணம் வீசும்
என் தேச எல்லையெங்கும்
தவறும் உளி கொத்தலிலே
சிதையும் சொற் சிற்பங்களை
தவிர்க்கும் வரம் வேண்டுகிறேன்
வேண்டாமல் உளிதனையே
ஒருநாளும் எடுக்கமாட்டேன்
வீண் அரட்டை அகற்றியே
வீட்டை நோக்கி சென்றிடுவேன்
இரவில் பகல்
குவிந்த வேலைகளை
குறைக்க
குறுக்கு திட்டம் ஒன்று
இரவு அரைமணி நேரத்தை கிழித்து
மதியவேளையில் ஒட்டினேன்
அதிசயம்
கிழிபட்ட இரவு அரைமணி வளர்ந்து
பகல் இரண்டரை மணிநேரமானது
குறுக்கு திட்டம் வெற்றி
வேலைகள் மட்டும்
நேரம் போல்
கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com
மறுமொழி இடவும்