டாஸ்மாக் வியாபாரம் செய்யும்
நாயக்கரின் கல்லாவுக்கு மேல்
பிள்ளையார் படம் இருக்க…
வாடிக்கையாளர் மைக்கேல் தினசரி
இரவு குடித்துவிட்டு வீடு
திரும்புகையில் அவன் பெண்டாட்டி
இயேசு கிருஸ்து படம் முன்
ஜெபித்துக் கொண்டிருக்க…
அவன் வாடிக்கையாக முறுக்கு, கிளாஸ்
வாங்கும் பாய் கடையில்
786 மக்கா படம் இருக்க….
மைக்கேல் கல்லீரல் சேதத்தால், அரசு
மருத்துவமனையில் சேர்கையில் அங்கு
மூன்று தெய்வங்களின் படம் ஒன்றாக இருந்தது!
க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768