மூலிகைத் தோட்டம்

மூலிகைத் தோட்டம்

ஒவ்வொரு மருத்துவமனை வளாகத்திலும் மூலிகைத் தோட்டம் அமைத்துப் பராமரித்தால் மக்களின் பெரும்பான்மையான தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும்.

தாவரங்கள் இயற்கை நமக்கு அளித்த வரம். முன்னோர்கள், ஆரம்ப காலத்தில் வேர்களையே மருத்துவத்திற்கு அதிகமாகப் பயன்படுத்தினர். வேர்களுக்கு “மூலம்” என்று பெயர்.

தாவரங்களில் தாதுப் பொருட்கள், தங்கச் சத்து, இரும்புச் சத்து, நார்ச்சத்து மற்றும் மாவுச் சத்துக்கள் அடங்கி உள்ளன. இவைகளை நாம் உணவாக உட்கொள்ளும் போது ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன.

இதனால் நோய் எதிர்ப்புத் தன்மை நன்னிலை பெற்று உடல் சீராக வளர உதவுகின்றது. இந்நிகழ்வு நம்மை அறியாமலே செயல்பட்டு வருகின்றது.

தற்காலத்தில் வேதியியல் மாற்றங்களினால் மனிதர்களுக்கு நோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தாவரங்களின் அதிகப் பயன்பாடு மட்டுமே நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் சஞ்சீவியாக விளங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இத்தகைய தாவரங்கள் மலைகளிலும், காடுகளிலும் இயற்கையாகவே செழித்து வளர்ந்துள்ளன. ஆனால் இன்றைய சூழ்நிலையில் அங்கு சென்று மூலிகைகளை சேகரிப்பதற்கு முடியாத நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே இது போன்ற முக்கியமான தாவரங்களை உயிர் காக்கும் மூலிகைகளாக நம் வீட்டுத் தோட்டங்களில் எளிதாக வளர்க்க இயலும்.

ஒவ்வொரு மருத்துவமனை வளாகத்திலும் மூலிகைத் தோட்டம் அமைத்துப் பராமரித்தால் மக்களின் பெரும்பான்மையான தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும். நோய்களும் மிக எளிய முறையில் குணப்படுத்தப்படும் என்று நாம் எண்ணுகிறோம்.

கீழ்கண்ட மூலிகைகளை வீட்டுத் தோட்டங்களிலோ அல்லது மருத்துவமனை வளாகங்களிலோ மிக எளிய முறையில் மூலிகைத் தோட்டங்களாக அமைத்து பயனடையலாம்.

அவுரி

அமுக்கரா

அதிமதுரம்

ஆடாதோடை

ஆடுதீண்டாப்பாளை

ஆவாரை

ஈசுவரமூலி

சிற்றரத்தை

கரிசாலை

கீழாநெல்லி

சோற்றுக் கற்றாழை

தண்ணீர் விட்டான் கிழங்கு

சிறு குறிஞ்சான்

செம்பருத்தி

துளசி

நிலவேம்பு

பொடுதலை

முடக்கறுத்தான்

வசம்பு

வல்லாரை

நொச்சி

தழுதாழை

இஞ்சி

திருநீற்றுப் பச்சிலை

கற்பூரவல்லி

நன்னாரி

கொடிவேலி

சிறுகண்பீளை

பிரமி

அனைத்து கீரை வகைகள்