மூலிகைகளின் தாவரவியற் பெயர்கள்

கிராமப் புறங்களில் அன்றாடம் பயன்படுத்தக்கூடியதும் மிக எளிய வகையில் கிடைக்கக் கூடியதுமானவை மூலிகைகள். அவைகளின் தன்மைகள், அவற்றின் நோய் தீர்க்கும் குணம், மகத்துவம் ஆகியவைகளை அறிந்து கொண்டால் மக்கள் வாழ்க்கையில் அன்றாடம் அவைகளைத் திறம்படப் பயன்படுத்திச் சாதாரணமாக ஏற்படுகின்ற நோய்களை மிகவும் எளிய முறையில் தீர்த்துக் கொள்ள இயலும்.

சில மூலிகைகளும் அவைதம் தாவரவியற் பெயர்களும், அடையாளம் கண்டறிதல் பொருட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

1  அம்மான் பச்சரிசி Euphorbia hirta
2 அருகம்புல் Cynodon dactylon
3 அவுரி Indigofera tinctoria
4 அரிவாள்மனைப்பூண்டு Sida acuta
5 ஆடாதோடை Adathoda vasica
6 ஆடுதீண்டாப்பாளை Aristolochia bracteolate
7 ஆவாரை Cassia auriculata
8 இம்பூரல் Oldenlandia umbellate
9 ஈசுவர மூலி Aristolochia indica
10 உத்தாமணி Daemia extensa
11 ஊமத்தை Datura alba
12 எருக்கன் Calotropis gigantean
13 கண்டங்கத்தரி Solanum xanthocarpum
14 கரிசலாங்கண்ணி Eclipta alba
15 காக்கணம் Clitoria ternatea
16 கீழாநெல்லி Phyllanthus amarus
17 குப்பைக் கீரை Amaranthus viridis
18 குன்றிமணி Abrus precatorius
19 குப்பை மேனி Acalypha indica
20 குடியோட்டிப்பூண்டு Argemone Mexicana
21 குமரி / கற்றாழை Aloe vera
22 கொட்டைக்கரந்தை Sphaeranthus indica
23 கோவை Coccinia indica
24 தண்ணீர்விட்டான் கிழங்கு Asparagus racemosus
25 சர்க்கரை வேம்பு Scoparia dulcis
26 சப்பாத்திக்கள்ளி Opuntia dillenii
27 சரக் கொன்றை Cassia fistula
28 சாரணை Trianthema decandra
29 சிறுபீளை Aerva lanata
30 சிறு குறிஞ்சான் Gymnema sylvestre
31 சிறு சின்னி Acalypha fruticosa
32 சிறுகட்டுக்கொடி Cocculus hirsutus
33 சிற்றாமுட்டி Pavonia zeylanica
34 சீந்தில் Tinospora cordifolia
35 செம்பருத்தி Hibiscus rosa-sinensis
36 துத்தி Abutilon indicum
37 தும்பை Leucas aspera
38 துளசி Ocimum sanctum
39 தூதுவேளை Solanum trilobatum
40 தொட்டாற்சுருங்கி Mimosa pudica
41 நஞ்சறுப்பான் Tylophora asthmatica
42 நல்வேளை Cleome gynandra
43 நன்னாரி Hemidesmus indicus
44 நாயுருவி Achyranthus aspera
45 நிலவேம்பு Andrographis paniculata
46 நீர்முள்ளி Asteracantha longifolia
47 நுணா / மஞ்சணத்தி Morinda tinctoria
48 நெருஞ்சில் Tribulus terrestris
49 நீர்ப்பிரமி Bacopa monnieri
50 பொடுதலை Lippia nodiflora
51 மிளகரணை Toddalia asiatica
52 முடக்கறுத்தான் Cardiospremum helicacaburn
53 முட்சங்கன் Azima tetracantha
54 முசுமுசுக்கை Melothria madraspatana
55 யானைநெருஞ்சில் Udalia murens
56 வசம்பு Acorus calamus
57 வல்லாரை Centella asiafica
58 வில்வம் Aegle marmelos
59 விஷ்ணுகிராந்தி Evolvulus alsinoides
60 வெட்டிவேர் Vetiveria zizanoides
61 வேம்பு Azadirachta indica
62 புங்கன் Pongamia pinnata
63 நொச்சி Vitex negundo
64 தழுதாழை Clerodendrum phlomoides
65 சுக்கு Gingiber officinalis
66 மிளகு Piper nigrum
67 திப்பிலி Piper longum