மெது பக்கோடா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கடலை மாவு : 1 கிலோ

டால்டா : 200 கிராம்

இஞ்சி : சிறிதளவு

பச்சைமிளகாய் : 10

சோடா உப்பு : ¼ தேக்கரண்டி

உப்பு : தேவையானது

வெங்காயம் : ¼ கிலோ

எண்ணெய் : பொரித்தெடுக்க

 

செய்முறை

மெது பக்கோடா தயாரிக்க‌ முதலில் ஒரு தாம்பாளத்தில் டால்டா, உப்பு, சோடா உப்பு, பொடியாக வெட்டிய வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மல்லிஇலை எல்லாம் போட்டு அழுத்தி தேய்த்து கடலை மாவையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு வெந்ததும் எடுத்து வைக்கவும். சுவையான மெது பக்கோடா தயார்.