எங்கோ ஓர்
முகமதியனின் சாம்ராஜ்யம்
தூள் தூளாக்கப் படுகிறது
துளைத்தெடுக்கும் இந்துவின்
குண்டுகளால்…
எங்கோ ஓர்
இந்துவின் கோயில்
இடித்து நொறுக்கப் படுகிறது
இஸ்லாமியர்களால்…
எங்கோ ஓர்
கர்த்தருடைய ஆலயத்தில்
காத்திருக்கிறது
மத மாற்றத்துக்கென
ஓர் கூட்டம்…
எங்கோ ஓரிடத்தில்
மாதா கோயில் மணியோசை
கேட்கிறது…
எங்கோ ஓரிடத்தில்
மசூதியின் தொழுகை சத்தம்
கேட்கிறது…
எங்கோ ஓரிடத்தில்
தேவாரம் முழங்குகிறது…
எங்கெங்கோ
எது எதுவோ நடந்தாலும்
அங்கங்கு அவரவர்
கடவுளுக்கான நித்திய பூஜை
நிதம் நிதம் நடக்கின்றது…
மொத்தத்தையும்
மதங்களற்ற கடவுள்
மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்…